பெடோரா லினக்ஸிற்காக http://fedoraintamil.blogspot.com என்ற ஒரு வலைப்பூவினை தோழர் சுபாஷ் அவர்கள் எழுதி ஆவணப்படுத்திவைத்திருக்கிறார்.என்னவென்று தெரியவில்லை தோழர் சுபாஷ் அவர்கள் தொடர்ந்து எழுதவில்லை.இந்த வலைப்பூவிற்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு பெடோரா லினக்ஸினைப் பற்றிய போதுமான தகவலகள் கிடைக்கும்.இந்த வலைப்பூவிலும் பெடோரா லினக்ஸை நிறுவுவது பற்றி சுபாஷ் அவர்கள் எழுதியுள்ளர்.அப்புறம் ஏன் இந்த பெடோரா லினக்ஸை நிறுவுவது பற்றி நான் PDF கோப்பாக உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீகளா.PDF கோப்பாக கொடுத்துவிட்டால் பெடோரா லினக்ஸினை நிறுவுவதற்க்கான ஒரு தமிழ் கையேடாக அமையுமல்லவா அதனால்தான்.நான் இந்த வலைப்பூவினை உருவாக்கும் போதே Ubuntu, Debian, Fedora, Mandriva, Open SUSE, Redhat, Linux Mint போன்ற பிரபலமான லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவுவதற்கான PDF கோப்புகளை உருவாக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன்.நானும் ஒரு காலத்தில் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை இணையத்தில் தேடி அலைந்திருக்கிறேன்.அனைத்தும் ஆங்கிலத்திலேயே கிடைத்தது இவ்வாறு கிடைத்ததும் எனக்கு உதவவில்லை.லினக்ஸிற்கான தகவல்கள் தமிழில் வடுவூர்குமார்,மயூரான்,சுபாஷ் மற்றும் சுதந்திர இலவச மென்பொருள் இந்த வலைப்பூக்களில் இருப்பதுதான் எனக்கும் முதலில் தெரியும் இந்த வலைப்பூக்களைல்லாம் முதலில் நான் பார்த்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.நான் கடந்த மூன்று வருடங்களாக LINUX For You இதழை வாங்கி படித்து வருகிறேன் மாதாமாதம் இந்த இதழுடன் ஒரு DVD யும் CD யும் கொடுப்பார்கள் இவ்வாறு கொடுக்கப்படும் DVD யில் ஒரு பிரபலமான அப்போதைய லினக்ஸ் இயங்குதளத்தினை கொடுப்பார்கள்.அப்பொழுது என்னிடம் கணினி இல்லை இவ்வாறு எனக்கு கிடைக்கும் வட்டுக்களை நிறுவிப்பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை பிறகு என்னுடைய நண்பர் மேற்பனைக்காடு செ.சந்திரசேகரன் கணினி வாங்கினார் நண்பர் கணினி வாங்கிய பிறகுதான் இந்த லினக்ஸ் இயங்குதளங்களையெல்லாம் நிறுவிப்பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது நானும் எனது நண்பரும் சொந்தமாகவே Ubuntu, Debian, Fedora, Mandriva, Open SUSE, Redhat, Linux Mint இன்னும் பிற லினக்ஸ் இயங்குதளங்களையும் நிறுவிக்கற்றுக்கொண்டோம்.நான் இப்பொழுது இணையத்தைப் பயன்படுத்துவது போல உள்ள வாய்ப்பெல்லாம் நாங்கள் பாலிடெக்னிக் படிக்கும் பொழுது அமையவில்லை வாரத்தில் இரண்டு நாட்கள் இணைய வசதி இருக்கும் மையத்திற்கு செல்வோம் ஒரு மணி நேரத்திற்கு 20 ரூ.ஆகையால் என்னைப்போன்று லினக்ஸ் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு இவ்வாறு உருவாக்கும் PDF கோப்புகள் உதவியாக அமையும் என்று நினைக்கிறேன்.
நான் இவ்வாறு உருவாக்கிய PDF கோப்புகளிலேயே நான் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கியது Debian லினக்ஸை நிறுவுவதற்க்காக உருவாக்கிய கோப்புதான் இந்த கோப்பினைப் பற்றி வாசகர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் கூட கிடைக்கவில்லை.
இதில் நண்பர் மணிகண்டன் அவர்கள் Redhat, Linux Mint இவைகளை நிறுவுவதற்கான PDF கோப்புகளை உருவாக்கி அளித்துவிட்டார்.இந்த முயற்சிக்கு நண்பர் மணிகண்டன் அளித்த உதவி மிகப்பெரியது ஏனென்றால் உண்மையிலேயே இவ்வாறு நிறுவுதலுக்கு உண்டான PDF கோப்புகளை உருவாக்குவதற்கு ஒரு பதிவினை இடுவதை விட பல மடங்கு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த PDF கோப்பினைக் கூட நான் எழுத ஆரம்பித்தது இரண்டு மாதத்திற்கு முன்பு ஆனால் இதை ஒரு சில காரணங்களுக்காக முழுமையாக எழுதி முடிக்க முடியவில்லை இப்பொழுதுதான் முடிந்தது.
மீதமுள்ள லினக்ஸ் இயங்குதளங்களையும் நிறுவுவதற்கு உண்டான PDF கோப்பினை உருவாக்க முயற்சிக்கிறேன்.
நீங்கள் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவிக்கற்றுக்கொள்ள விரும்பினால் Sun Virtual Box, VM ware Workstation மென்பொருள்களை நிறுவிக்கற்றுக்கொள்ளலாம்.இந்த இரண்டையும் விண்டோஸ் இயங்குதளத்திலேயே, நிறுவிக்கொள்ளலாம்.லினக்ஸில் Sun Virtual Box, Qemu ஐப் பயன்படுத்தலாம் இந்த மென்பொருள்களுக்கு Virtualisation மென்பொருள்கள் என்று பெயர். அதாவது இந்த மென்பொருள்களை பயன்படுத்தி ஒரு இயங்குதளத்திற்குள் நிறைய இயங்குதளங்களை நிறுவிக்கொள்ளலாம் இந்த மென்பொருள்கள் லினக்ஸை நிறுவிக்கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.வன்வட்டிற்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.நிறுவுவதற்கு உண்டான வழிகாட்டிகளை படித்துப்பார்த்து எவ்வாறு நிறுவுவது என்று தெரிந்து கொண்டு Sun Virtual Box, VM ware Workstation மென்பொருள்களில் நிறுவி பழகிக்கொள்ளுங்கள்.உண்மையிலேயே ஹார்டுவேர் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ரொம்பவும் பயன்படும்.
0 comments:
Post a Comment