Monday, October 25, 2010

நோக்கியா C3 செல்போன்

நோக்கியா வெளியிட்ட புதிய C3 செல்போன்!

இளைஞர்களைக் கவரும் விதத்தில் புதிய C3 செல்போனை வெளியிட்டுள்ளது முதல் நிலை தயாரிப்பு நிறுவனமான நோக்கியா.

சமூக தளங்களான போஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்றவை எப்போதும் இணைப்பிலிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செல்போன்கள் வைஃபி இணைப்பு கொண்டவை.

பேஸ்புக்கில் இருக்கும் போதே, வேறு எண்களை அழைக்கவும், வரும் அழைப்புகளில் பேசவும் முடியும். எம்எஸ்என், ஜி டாக், ஓவி சாட், யாஹூ மெஸஞ்சர் அனைத்தையும் பயன்படுத்த முடியும் இந்த வகை செல்போன்களில்.

இந்த வகை போனின் விலை ரூ 7249 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

map

free counters free counters

share

page navigation

cluster maps

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...