Thursday, October 28, 2010

உலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்துவிட்டது..

இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே  இருக்க முடியாது , அதிலும் புது புது வகையான செல்போன்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன.

இன்று உலகெங்கும் இரண்டு சிம்கார்டு  போடும் செல்போன்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த வகையான செல்போன்கள் கணிசமாக பெருகி வருகின்றன . நோக்கியா , சாம்சங் , எல்.ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட இந்த வகையான செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் OTECH என்ற கம்பெனி புதிதாக 4 (  நான்கு ) சிம்கார்டுகளை போட்டு பயன்படுத்திகொள்ளும் வகையில் ஒரு செல்போனை வடிவமைத்துள்ளனர். 




என்ன ? நம்பமுடியவில்லையா ....? உண்மைதான் நண்பர்களே ... இந்த செல்போன் 4 (  நான்கு ) சிம்கார்டுகளை பயன்படுத்தி கொள்ளும் உலகின் முதல் " Quad SIM Mobile Phone " ஆகும். 

இந்த போனின் சிறப்புகள்

  • 2.4-inch touchscreen டிஸ்ப்ளே
  • 12.1-megapixel கேமரா
  • Supports PAL/NTSC/SECAM TV tuner
  • FM Radio
  • Bluetooth
  • Four SIM compatible
  • A full QWERTY keypad

  • GPRS for Internet connectivity

இந்த வகை செல்போன் முன்னணி கம்பனிகளின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் , இன்று நெறைய தரமான செல்போன்கள் பல லோக்கல்  கம்பனிகளில் கிடைப்பதும் நம்மால் மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த மாடல் நல்ல தரத்துடன் இருந்தால் நம் இந்தியருக்கு கொண்டாட்டம் தான் ... !

0 comments:

Post a Comment

map

free counters free counters

share

page navigation

cluster maps

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...