நெருப்புநரி உளவியானது தற்போது அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்த நெருப்புநரி உளவியானது மைக்ரோசாப்டின் இண்டர்நெட் எக்ஸ்புளோரரைவிட மிகவும் சிறப்பாக உள்ளது. இநத நெருப்புநரி உளவியில் நீங்கள் ஒரே விண்டோவில் பல டேப்புகளை திறந்து அதன் மூலம் பல வலைபக்கங்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும். இந்த பயர்பாக்ஸ் உளவியில் ஒவ்வொரு டேப்பிலும் Close பட்டன் இருப்பியல்பாக இருக்கும் இந்த பட்டனை நீங்கள் விரும்பியபடி மாற்றியமைத்து கொள்ள முடியும்.
இந்த Close பட்டனை நீங்கள் விரும்பினால் மாற்றி கொள்ள முடியும். முதலில் நெருப்புநரி உளவியினை திறந்து கொள்ளவும். பின் அட்ரஸ்பாரில் about:config என தட்டச்சு செய்யவும்.
ஒகே செய்து விட்டு, அடுத்ததாக தோன்றும் விண்டோவில் browser.tabs.closeButtons என்பதை தேர்வு செய்து, இதனுடைய மதிப்பு (Value)-னை 3 என மாற்றி உள்ளிடவும். இப்போது அனைத்து டேப்புகளுக்கும் Close பட்டன் இருக்காது, மீண்டும் பட்டனை Enable செய்ய விரும்பினால் இதே வழியினை பின்பற்றி Value-வினை 1 என மாற்றி உள்ளிடவும்.
0 comments:
Post a Comment