இமெயில் சேவையை வழங்கும் எண்ணற்ற இணையத்தளங்கள் வந்துவிட்டன. புற்றீசல்கள் போல் பெருகிவிட்ட இமெயில் சேவையில், போலிகளும் கலந்துவிட்டன. சில சமயம் நமக்கு வரும் இமெயில்களை அனுப்பியவர்களின் முகவரி உண்மையானதா என்ற சந்தேகம் ஏற்படும். சந்தேகமான இமெயில் முகவரிகளை, சோதனை செய்து அது உண்மையான முகவரியில் இருந்துதான் வந்துள்ளதா? என்பதை கண்டறிந்து சொல்லும் சேவையை http://www.verify-email.org/ என்னும் இணையத்தளம் வழங்குகிறது.
இந்த இணையத்தளத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட இமெயில் முகவரியை அளிக்க வேண்டும். இந்த இணையத்தளம் சம்பந்தப்பட்ட இமெயில் முகவரியின் சர்வர் உடன் இணைந்து, உண்மையிலேயே இந்த முகவரிக்கு இன்பாக்ஸ் இருக்கிறதா? என்பதை கண்டறியும். இன்பாக்ஸ் உள்ள முகவரி எனில் உண்மையான முகவரித்தான் என்ற தகவலை நமக்கு அளிக்கும். இதனால் போலியான இமெயில் முகவரிகளை எளிமையாக கண்டறியலாம்.
0 comments:
Post a Comment