இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், 2 ஆயிரம் கோடி வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, பார்தி ஏர்டெல் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான சுனில் பார்தி மிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
ஆசிய மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் 19க்கும் மேற்பட்ட நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள ஏர்டெல் நிறுவனம், 15 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்துள்ளதாகவும், 2 ஆயிரம் கோடி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வசம் உள்ளதாகவும், இதன்மூலம், சர்வதேச அளவில், தொலைதொடர்பு துறையில் முன்னணி இடத்தைப் பெற்றிருப்பதாகவும், இதனைக் கொண்டாடும் பொருட்டும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல வசதிகளை அளிக்கும் பொருட்டும், இளைய தலைமுறையினரைக் கவரும் விதமாக புதிய லோகோ வடிவமத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் உருவாக்கப்பட்டு, சர்வதேச அளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட சிக்னேச்சர் டியூனும் புதுப்பொலிவு பெறுகிறது.
2007 அக்டோபர் மாதத்தில், 50 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த தங்கள் நிறுவனம், 2009ம் ஆண்டு மே மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களையும், கடந்த 18 மாதங்களில், ஏர்டெல் குழுமத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளதாகவும், இதன்மூலம் தான், தாங்கள் முன்னணி இடத்தைப் பெற முடிந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டின் இறுதி்ககுள், ஏர்டெல் நிறுவனம், 3ஜி சேவையை துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment