Sunday, November 21, 2010

யாஹூமெயில்ஐடில் -ஆன்லைனில் இருக்கிறார்களா இல்லையா

இது ஒரு வித்தியாசமான பதிவு . நாம் நமது நண்பர்களிடம் சாட்டிங்கில் சாட் பண்ணுவது, அப்புறம் வாய்ஸ் சாட் பண்ணுவதும் உண்டு அல்லவா..? அவர்கள் அப்போது ஆன்லைனில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். சில வேளைகளில் நமது நண்பர்கள் invisible -லில் இருப்பார்கள். (நாமும் இப்படி இருப்போம் அல்லவா ) . அவர்களுடன் நாம் அவசரமாக ஏதாவது பேசலாம் என்று வந்தால் அவர்கள் offline -ல் இருப்பார்கள் அதாவது invisible போட்டு இருந்தால் நமக்கு அவர்கள் இருந்தாலும் இல்லாத மாதிரி தான் தெரியும் அதாவது இருப்பாங்க ஆனா இல்லை. நாமும் நண்பன் இல்லை என்று நினைத்து திரும்பிவிடுவோம். இப்படி invisible -ல் இருந்து நண்பர்களையும் தெரிந்தவர்களையும் ஏமாற்றும் இத்தகைய "invisible நண்பர்களை" எப்படி கண்டு பிடிக்கலாம் என்று பார்ப்போம். நாம் online -இல் போகாமலே நமது நண்பர்கள் online -ல் இருக்கிறார்களா அல்லது invisible -லா, அல்லது offline -னா என்று  தெரிந்து கொள்ளலாம்.
அதற்க்கு நீங்கள் http://detectinvisible.com/ என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்று உங்கள் நண்பனின் அல்லது யாரை செக் பண்ண வேண்டுமோ அவருடைய இ மெயில் ID கொடுத்து GO -வை க்ளிக் செய்தால் போதும் உடனடியாக நீங்கள் தேடிய நபர் இப்போது online -னிலா அல்லது invisible -லிலா அல்லது offline -னிலா என்பது நமக்கு தெரிந்து விடும். அதன் பிறகு என்ன invisible -ல மறைந்து இருந்தாலும் அவர்களை கண்டு பிடித்து " இது வரைக்கும் invisible -ல இருந்தது போதும்பா .." என்று ஒரு மெசேஜ் போடுங்க உங்கள்  "invisible நண்பர்" அதிர்ச்சியில் உறைந்து போவார். அதன் பிறகு அவர் invisible -என்பதையே மறந்து விடுவார் என்ன நான் சொன்னது சரிதானே.

0 comments:

Post a Comment

map

free counters free counters

share

page navigation

cluster maps

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...