Fedora OS அறிமுகம் - 0
Fedora லினக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு இலவச கட்டற்ற இயங்குதளம். இந்த பெடோரா லினக்ஸ் பற்றிய உதவிக்குறிப்புகளாகத்தான் இந்த ”தமிழ் Fedora" அமையவிருக்கிறது. முதலிலேயே லினக்ஸ் பற்றி அதிகமாக எனக்கு ஒன்றும் தெரியாதென இங்கேயே கூறிவிடுகிறேன். வழமையாக உபுண்டு வைத்தான் பயன்படுத்தி வந்தேன். ஆனால் பெடோராவை கற்றிருப்பது கூடுதல் தகைமையாதலால் இப்போது அதனையும் சுயமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். பல இணையத்தளங்களும் Fedora வினது உத்தியோக பூர்வ இணையத்தளமும் பல உதவிக்குறிப்புகளை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதற்கண் நன்றிகள். படிக்கும் தகவல்களை அப்படியே கணினியில் சேமிக்கும் வழக்கமுண்டு. அதனை பதிவிலும் இட்டு உங்களுடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களின் அனுபவத்திலுருந்தும் அறிவிலுமிருந்தும் இன்னும் புதிய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாமென நினைக்கிறேன். ஏனெனில் இங்கு பலர் சுளியோடி முத்துப்பெற்றவர்கள். அவர்களின் ஆதரவு எப்போதுமிருக்குமென நம்புகின்றேன்.
பல நிறுவனங்கள் தங்களின் சர்வர் மேலாண்மைக்கு அதிகம் Cent OS, Suse Linux மற்றும் RedHat Server போன்றவற்றைத்தான் பயன்படுத்துவார்கள். சிலர் Debian OS பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் ஒவ்வொரு வினக்ஸ் இயங்குதளங்கள்தான். Linux Flavors என குறிப்பிடுவார்கள். இவற்றில் Cent OS மற்றும் RedHat Server ஆகியவை Fedora வினை தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். உபுண்டுவிற்கு 98%ம் தான்.
Susi Linux மற்றும் Debian OS போன்றவை உபுண்டுவிற்கு தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். Fedora விற்கு 98%ம் தான். காரணம் Fedora ஆனது ஆரம்பகால RedHat இயங்குதள kernel இனை அடிப்படையாக வைத்து அதே கட்டமைப்புக்களுடன் உருவாக்கப்பட்டது. ஆனால் உபுண்டுவோ Debian OS இன் கட்டமைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையில் மேலோட்டமாகப் பார்த்தால் எந்த வேறுபாடுகளும் தெரியாது. ஆனால் மென்பொருள் நிறுவும் பொறிமுறையும் சில commands வித்தியாசமாக பாவிக்கப்படும். ( வேறுபாடுகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தரவும் )
சரி, இனி பெடோராவைப்பற்றி பார்க்கலாம். Fedora Core 4 விலிருந்து இதனை பயன்படுத்தி வருவதனால் மற்றய லினக்ஸிலிருந்து இது மிகவும் பிடித்தவொன்றாக மாறிவிட்டது. பெடோராவின் முழு வரலாறும் விக்கிப்பீடியாவின் பக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அதையெல்லாம் விட்டுவிட்டு விடயத்திற்கு வரலாம். தற்போது பெடோராவின் 10ம் பதிப்புதான் சந்தையில் இறுதியாக வெளிவந்திருக்கும் பதிப்பு. அடுத்த மாதம் 11ம் பதிப்வை வெளியிடுகிறார்கள். இப்போது வேண்டுமானால் பீட்டாவினை தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் இங்கு நாம் பார்க்கப்போவது Stable ஆகவிருக்கும் 10ம் பதிப்பைப்பற்றித்தான்.
பெடோரா 10 ஆனது x86 மற்றும் x64 பதிப்புகளாக கிடைக்கிறது. நமது கணினியின் வேகம் அதிகமாகவிருந்தால் x64 பதிப்பினை நிறுவிக்கொள்ளலாம். அதாவது உங்களிடம் 3GB க்கு மேலான அளவு ரேம், AMD x86_64 ரக அல்லது இன்டல் Dual Core/ Core 2 Due மற்றும் இவற்றிற்குப்பிந்திய processor இருக்குமானால் இந்த 64பிட் பதிப்பின் முழு வேகத்தையும் எங்களால் அனுபவிக்க முடியும். வேகம் என்றால் சும்மா இல்லை. மேலே கூறியதைவிட வேகம் குறைந்த எனது மேசைக்கணினியில் 64பிட் பதிப்பு நிறுவ எடுத்த கால அளவு வெறும் 5 நிமிடங்கள்தான். ( 32பிட் உபுண்டுவிற்கு 15 நிமிடம், 32பிட் விஸ்டாவிற்கு அல்டிமேட் 20-30 நிமிடம், 32 பிட் XP_sp2 க்கு 20-25 நிமிடம், 64பிட் XP_sp2 ற்கு 15 நிமிடங்களும் பிடித்தது). அவ்வாறில்லையெனில் 32பிட் பதிப்பான x86 இனையே நிறுவிக்கொள்ளலாம். நீங்கள் போலி இயங்குதள மென்பொருட்களை ( Vertual Box / VM Ware போன்றவற்றில் நிறுவலாம். ஆனால் Vertual PC இனை தவிர்த்தல் நலம்) பாவிப்பதாயின் 32பிட் இயங்குதளத்தையே நிறுவிக்கொள்ளவும்.
அடுத்து நமக்குத்தேவை எம்மாதிரியான வரைகலை இடைமுகப்பினை (Desktop Interface ) என்பதை வைத்து 2 வகையாக பிரிக்கலாம். சாதாரணமாக பிரபலமான Linux Desktop ஆக Gnome விளங்குகிறது. இது பாவிக்க சற்று இலகுவாகவிருப்பினும் பயனர்களிற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்வது கடினம். அதற்கேற்றாற்போல பயனர்தான் வளையவேண்டும். அடுத்தது KDE எனப்படும் பழைமைவாய்ந்த இடைமுகப்பு. இது ஆரம்ப காலத்தில் லினக்ஸ் முதன்முதலில் GUI ஆக வந்தபோதிலிருந்து பணன்படுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. தற்போது KDE 4.1 ஆனது மிகவும் வலிமைவாய்ந்த இலகுவானதொரு பயனர் இடைமுகப்பாக தெழிற்படுகின்றது. பயனர் தேவைக்கேற்ப வளைந்து கொடுப்பது இதன் சிறப்பம்சமாகும். இதனால் லிகன்ஸிற்கு மென்பொருள் தயாரிப்பவர்களின் முதற்தேர்வாகவும் KDE இருக்கின்றது.
நாம் இங்கு முதலில் 32பிட் Gnome உடைய பெடோராவைப்பற்றி பார்க்கலாம். 64பிட்டிற்கு வரவேற்பு எவ்வாறு கிடைக்குமென தெரியாது. அதனால் 64பிட் பற்றி பின்னர் பார்க்கலாம். ( தட்டச்சு செய்யும் நேரம் மிச்சம் ) மற்றும் சாதாரணமான Genome இலிருந்து படிப்பதும் நல்லது. நல்ல புலமை பெற்றபின்னர் மற்றயதை நாமே சுயமாக கற்றுக்கொள்ளலாம்.
சரி, Fedora 10 x86 நிறுவப்போகின்றோம். இவற்றை எங்கிருந்து எவ்வாறு பெற்றுக்கொள்வதென பார்க்கலாம்.
Fedora x86 Gnome 1CD ISO Direct Download Live CD
Fedora x86 Gnome 1CD ISO Torrent Download Live CD
Fedora x86 KDE 1CD ISO Direct Download Live CD
Fedora x86 KDE 1CD ISO Torrent Download Live CD
Fedora x64 Gnome 1CD ISO Direct Download Live CD
Fedora x64 Gnome 1CD ISO Torrent Download Live CD
Fedora x64 KDE 1CD ISO Direct Download Live CD
Fedora x64 KDE 1CD ISO Torrent Download Live CD
Full Download List
சரி. இனி நிறுவ முன்னர் கணினியின் அடிப்படைத்தேவைகள் என்னவென பார்க்கலாமா ? அதாவது System Requirements. இதை யாராவது இணையத்தில் தேடி பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்ச்சி. இல்லாவிடில் அதையும் இடுத்த பதிப்பில் கூறிவிடுகிறேன். சும்மா அடிச்சு தேடிப் பாருங்க.
அடுத்த பதிவு நிறுவுவது எவ்வாறென படங்களுடன் வருகிறேன்.
அன்புடன் சுபாஷ்.
மேலதிக தகவல்களுக்கு:-
Linux Flavors பற்றி கூறியிருந்தேன்.
அனைத்து லிகள்ஸ் பற்றிய ஒப்பீடு
பிரபலமான 10 லினப்ஸ் பற்றிய ஒப்பீடு
நிரந்தரமாக பெடோரா வினை வன்தட்டில் நிறுவுதல் -1
சென்ற பதிவில் வேர்ச்சுவல் கணினியில் எவ்வாறு Live பதிப்பை இயக்குவதென பார்த்தோம். இம்முறை எப்படி வன்தட்டில் நிரந்தரமாக நிறுவுவதென பார்க்கலாம். நீங்கள் வேர்ச்சுவல் கணினியில் நிறுவுவதாயின் வன்தட்டினை தகவமைப்பதைப்பற்றி கவலையே படத்தேவையில்லை. ஆனால் உண்மையான கணினியில் நிறுவுவதாயின் உங்களுடைய மற்றய வன்தட்டு பிரிவினைகளை பாதிக்காதவாறு நிறுவவேண்டும். நாம் முதலில் வேர்ச்சுவல் கணினியிலேயே நிறுவிப்பார்க்கலாம். நீங்களாகவே சிலசமயம் முயன்றிருப்பீர்கள். ஆனாலும் விளக்கமாக இந்தப்பதிவில் பார்க்கலாம்.
வேர்ச்சுவல் கணினியில் Install to Harddisk எனும் ஐகானை இரட்டைச்சொடுக்குவதன் மூலம் நிறுவும் பணியினை ஆரம்பிக்கலாம்.

2. ஆரம்பத்தில் வரும் வரவேற்பு செய்திகளை தாங்கிய சாளரங்களை Next இனை சொடுக்கி கடந்து வந்தீர்களானால் மொழியினை தேர்வு செய்யும் பகுதி வரும். இங்கு விரும்பிய இயக்குதள மொழியினை தேர்வு செய்யலாம். தமிழ் கூட இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கடுந்தமிழ்.
3. அடுத்து Keyboard layout. இங்கு எதுவும் செய்யவேண்டியதில்லை. அப்படியே இடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
4. இங்கு Host Name எனும் இடத்தில் உங்ககுடைய பெடோரா கணினியின் பெயரை தரவேண்டும். இன்னும் பெயர் சூட்டவில்லையெனில் Fedora-Home, My-Fedora-pc என விதவிதமாக விரும்பியவாறு பெயர் சூட்டலாம். நெட்வேர்க்கில் இணையும்போது உங்கள் கணினியை அடையாளம்பாண இந்தப்பெயர் உதவும்.
5. அடுத்து உங்கள் வசிப்பிடம் பற்றிய தகவல். இது தன்னிச்சையாக உங்கள் உள்ளூர் வழக்கங்களை கணினியில் ஏற்றிவிடும். அதாவது பண அலகு ( US$, Rs, C$ ), நேரம் போன்றவை.
6. அடுத்து System Administrator அகவுள்ள முதன்மைநிலை பயனர்கணக்கிற்குரிய கடவுச்சொல்லை அமைக்கவேண்டும். அதாவது Root Pasword. இதனை அப்படியே எங்காவது எழுதிவைத்துவிடுங்கள்.
7. இப்போது நாம் மிக முக்கியமான வன்தட்டு பிரிவினை பக்கத்திற்கு வந்திருப்போம். நீங்கள் வேர்ச்சுவல் கணினியில் நிறுவப்போகிறீர்களெனில் "Remove all partitions on selected drives and create default layout" எனும் தெரிவினை பயன்படுத்தலாம்.
அல்லது ஏற்கனவே வேறு இயக்கதளங்கள் நிறுவப்பட்ட கணினியின் மீதமாகவுள்ள பிரிவினையில் ( Partition ) நிறுவும் எண்ணமிருப்பின் "Use free space on the selected drives and create default layout" எனும் தெரிவிளை தேர்ந்தெடுக்கவும். எப்படியாயினும் x86 வகை பெடோராவினை நிறுவ 10GB யும் x64 பதிப்பினை நிறுவ 20BG இடமும் தேவை.
Next இனை சொடுக்க அடுத்து Root Password இனை கேட்கும். சரியான கடவச்சொல்லை தந்துவிட்டீர்களெனில் நீங்கள் வன்தட்டு பிரிவினை பகுதிக்குச்செல்லலாம்.
இங்கு 3 வகையான பிரிவினைகளை ஏற்படுத்தவேண்டும்.
- Root Partition எனப்படும் சிஸ்டம் சார்ந்த கோப்புகளை நிறுவும் இடம். இது குறைந்தது 3-4GB அளிவிருத்தல் நலம். அதாவது விண்டோஸ் இயக்கதள C Drive போன்றது.
- Swap Partition எனும் தற்காலிக சேமிப்பிற்கான இடம். இது உங்கள் RAM இன் 3/2 பகுதியளவு. அதாவது ஒன்ரரைமடங்கு. உதாரணமாக நீங்கள் வேர்சுவல் கணினியின் ரேம் அளவு 1GB என தந்திருந்தீர்களெனில் Swap அளவு 1.5GB யாகவோ அதற்கு மேலாகவோவிருத்தல் வேண்டும். விண்டோஸ் இயக்கதளத்தில் Virtual Memory என வருவது.
- Home Partition எனும் பயனர் கோப்பினை சேமிக்கும் இடம். இது குறைந்தது 4GB யாவது இருத்தல் நலம்.

8. நீங்கள் "Use free space on the selected drives and create default layout" என்பதனை தெரிவுசெய்திருப்பின் கீழேயுள்ளவாறு திரை இருக்கும்.
இங்கு Free space என்பதுதான் வெறுமையாகவுள்ள நமது வன்தட்டு. இதனைத்தான் நாம் பிரிவினைக்குட்படுத்தப்போகிறோம். New எனும் பட்டனை சொடுக்கவும். வரும் திரை கீழேயுள்ளவாறு இருக்கும்.

- Mount Point என்பதில் “ / “ என்பதை தேர்துந்தெடுக்கவும். இதுதான் Root எனும் சிஸ்டம் பகுதிக்கான பகுதி.
- File System Type என்பதில் ext-3 என்பதனை தெரிவுசெய்யவும். விண்டோசில் FAT32, NTFS போன்று லினக்ஸ் இந்த வரைமுறையைத்தான் பயன்படுத்துகிறது.
- அடுத்து Size இனில் 3 அல்லது 4GB யினை தந்துவிடுங்கள்
- Fixed Size என்பதனையும் தேர்வில் இருக்குமாறு OK யினை சொடுக்கினால் நீங்கள் Root Partition இனை உருவாக்கி முடித்துவிட்டீர்கள்.
பின்னர் மீண்டும் Free Space என்பதனை தேர்வுசெய்து மீண்டும் New பட்டனை சொடுக்கவும். இம்முறை Swap பிரிவினையை உருவாக்கப்போகிறோம். படத்தில் காட்டியுள்ளவாறு செயற்படவும். Mount Point என்பதில் எதனையும் தெரிவுசெய்ய வேண்டாம். நேரடியாக File System type என்பதில் Swap என்பதனை தெரிவுசெய்யுங்கள். Size என்பது உங்கள் வேர்சுவல் கணினியின் RAM ன் 3/2 பகுதியாகவிருக்கவேண்டும்.
அடுத்து Home Partition. மீண்டும் Free Space என்பதனை தேர்வுசெய்து New பட்டனை சொடுக்கவும். இப்போது Mount Point ல் /HOME என்பதனை தெரிவு செய்யவும். அடுத்து ext-3 system type. Fill to maximum என்பதனை தெரிவு செய்தால் மீதமாகவுள்ள அனைத்து இடங்களையும் இது தனதாக்கிவிடும். நாம் கணித்தல் வேலைகளை செய்ய தேவையில்லை. அல்லது Fill all space upto என்பதை தெரிவுசெய்து அந்த சாரளத்தை சற்சு நகர்த்தி பின்னாலுள்ள சாளரத்தில் Free Space எவ்வௌவென பார்த்து நீங்களாகவே தட்டச்சு செய்யலாம்.
சிலவேளைகளில் இங்கு ஒரு சிக்கல் வரலாம். உங்கள் வேர்சுவல் கணினியில் இடம் போதவில்லையெனில் இந்த பிரிவினையை உருவாக்க முடியாதென பழைச்செய்தி வரலாம். வந்தால், “/” எனும் Root partition இனை தெரிவுசெய்து Edit பட்டனை அழுத்தி அடன் Size இனை குறைத்துவிடவும். பின்னர் /HOME னை உருவாக்குங்கள். இதன்பின்னர் மீண்டும் “/” இன் அளவை பழையபடி 3GB/4GB ஆக்கிவிடுங்கள்.
இந்த செயற்பாட்டினை வன்தட்டில் நிரந்தரமாக பதிக்கவாவென கேட்கும். அதனை ஆமோதித்துவிட்டால் அத்துடன் நமது பிரிவினையுண்டாக்கும் படலம் முடிந்தது.
9. அடுத்து என்னென்ன மென்பொருட்களை நிறுவவேண்டுமென கேட்கும். இப்போதைக்கு Next இனை மட்டும் தெரிவுசெய்யுங்கள். இதனை பின்னர் விரிவாக பார்க்கலாம்.
10. அடுத்து Boot செயன்முறையை தகவமைக்க வேண்டும். நம்மிடம் பெடோரா மட்டுமேயுள்ளதெனில் படத்திலுள்ளவாறு இருக்கும். Next இனை தெரிவுசெய்துவிட்டால் மட்டும் போதுமானது. அல்லாவிடில் மற்றய இயக்கதளமும் இருக்கும். எது default ஆகவிருக்கவேண்டுமென தெரிவுசெய்துவிட்டால் சரி.
11. நிறுவுதல் செயல்பாடு முடிந்தபின்னர் கணினியை restart பண்ணவேண்டுமென செய்திவரும். Restart பண்ண பெடோரா boot ஆகும்.
கடவுச்சொல்லை தந்தபின்னர் பெடோரா வரவேற்புத்தளத்தில் நீங்கள் இருப்பீர்கள்.
12. அடுத்து நீங்கள் உங்களுக்கான பயனர் கணக்கொன்றை உருவாக்கவுண்டும். இதன் கடவுச்சொல் Root பயனரின் கடவுச்சொல்லாகவிருக்காமலிருத்தல் நலம்.
13. அடுத்து வருபவைகளை Next இன் மூலம் அனுப்பிவிட்டால் புகுபதிகை சாளரத்திந்கு வருவீர்கள். ( Login Screen )
14. நீங்கள் சற்றுமுன்னர் தந்த பயனர் கணக்கின் மூலம் புகுபதிகை செய்தால் உங்கள் பெடோராவின் வரைகலைப்பணித்தளத்தில் ஜாம்ஜாமென இருப்பீர்கள்.
பெடோரா மட்டுமல்ல 90% மான லினக்ஸ் இன் நிறுவும் செயற்பாடு இப்படியேதான் இருக்கும். வேறுபாடுகள் இருக்காது.
Fedora 10 நிறுவ போலி இயக்கதளத்தை வடிவமைத்தல் - 02
இந்தப்பதிவின் முந்தய பாகம் . தொடர்கிறது....
8. இனி நீங்கள் பெடோராவின் ஜோதியில் ஐக்கியமாகிவிடலாம். பூட் செய்ததும் பெடோராவின் Live எனப்படும் செயல்பாடு ஆரம்பிக்கப்படும். இதன் சிறப்பம்சமென்னவெனில் இயக்குதளத்தினை நிறுவாமலேயே அவ்வியக்குதளத்தினை நாம் பயன்படுத்தலாம். முக்கியமான வேளைகளில் கணினி செயற்படாது போனால் இந்த Live CD இனை பயன்படுத்தி நமது வன்தட்டிலிருக்கும் தகவல்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த Live ஆரம்பித்ததும் உங்கள் திரை கீழேயுள்ளவாறு காணப்படும்.

இந்தத்திரை வந்ததும் உங்களிற்கு விருப்பமானவாறு எங்கு வேண்டுமானாலும் சென்று நமது பெடோராவினை சுற்றிப்பார்த்து எப்படியிருக்கிறதென பார்த்துவரலாம்.
பதிவு நீண்டுவிட்டதால் அடுத்த பதிவினில் நமது போலி கணினியின் வன்தட்டில் நிரந்தரமாக நிறுவுவது எவ்வாறென பார்க்கலாம். போலி கணினியில் செய்வதனைத்தையும் உங்கள் உண்மையான கணினியிலும் செய்யலாம். ஆனால் ஏற்கனவே உங்களிடம் வேறு இயக்குதளமிருப்பின் அதனை பாதிக்காமல் நிறுவுவதெப்படியென தெரிந்துவிட்டு நிறுவலாம். அதனை விளக்கி அடுத்த பதிவில் சொல்கிறேன்.
அன்புடன் சுபாஷ்
---------------------------------------------------------------------------
எல்லாம் பார்த்து முடிந்ததா? அடுத்த பதிவிற்கு முன்னரே நீங்கள் வன்தட்டில் நிரந்தரமாக நிறுவிப்பார்க்கலாமே. ஏனெனில் உங்கள் கணினிக்கு எதுவும் ஆகப்போவதில்லை. நிறுவலில் பிழையிருப்பின் இந்த போலி கணினியை அழித்துவிட்டு புதிதாகவொன்று உருவாக்கினால் போகிறது. இதற்கு Desktop ல் உள்ள Install to Hard Drive எனும் ஐகானின் மீது இரட்டைச்சொடுக்கு போடவும். நீங்களாகவே வெப்பில் தேடி எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி நிறுவுவதென ஒரு முறை trip போவது போல முயன்று பார்த்துவிடுங்கள். பின்னர் பதிவிட்டபின்னர் பதிவோடு ஒத்துப்பார்த்து சரிபார்த்துவிடலாம். வாழ்த்துக்கள்.
practical ஆக முயன்று பார்க்காமல் படிக்கும்போது, நிறைய விடயங்களை புரியாமலே படித்துக்கொண்டுசெல்கிறோம். ஆனால் ஒருமுறை முயன்று பார்த்துவிட்டால் பல விடயங்களை பற்றிய அறிவு கிடைத்துவிடுவதனால் நாம் பல கேள்விகளோடு படிக்கத்துவங்குகிறோம். இதனால் முழுவதுமாக படிக்கும் விடயத்தைப்பற்றி புரிந்த கொள்ளலாம். அதுவும் ஒரேதரத்திலேயே!!!!
பதிவிற்கும் சரி, பாடசாலை. பல்கலைக்கழகங்களிலும்சரி இம்முறை நிறையவே கைகொடுக்கும்.
-----------------------------
முந்தய பதிவினில் System Requirements பற்றி கேட்டிருந்தேன்.
fedora 10 system requirements என கூகிளில் தேடினால் முதலாவதாக வரும் தேடல் முடிவிலேயே முழு பதிலும் இருக்கிறது.
அவைதான் அவை.
2.4.2.1. Hardware requirements for x86
In order to use specific features of Fedora 10 during or after installation, you may need to know details of other hardware components such as video and network cards.
2.4.2.1.1. Processor and memory
The following CPU specifications are stated in terms of Intel processors. Other processors, such as those from AMD, Cyrix, and VIA that are compatible with and equivalent to the following Intel processors, may also be used with Fedora.
Fedora 10 requires an Intel Pentium or better processor, and is optimized for Pentium 4 and later processors. - Recommended for text-mode: 200 MHz Pentium-class or better
- Recommended for graphical: 400 MHz Pentium II or better
- Minimum RAM for text-mode: 128MiB
- Minimum RAM for graphical: 192MiB
- Recommended RAM for graphical: 256MiB
2.4.3.1. Hardware requirements for x86_64

2.4.3.1.1. Memory requirements for x86_64
- Minimum RAM for text-mode: 256MiB
- Minimum RAM for graphical: 384MiB
- Recommended RAM for graphical: 512MiB
Fedora 10 நிறுவ போலி இயக்கதளத்தை வடிவமைத்தல் -01
இன்று நாம் Vertual Box எனும் போலி இயக்குதள மென்பொருளில் Fedora வை நிறுவிப்பார்க்கப் போகிறோம். போலி இயக்குதள மென்பொருளானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள இயக்குதளத்தில் இயங்கும் ஒரு சாதாரண மென்பொருள். இந்த மென்பொருளின் உள்ளே உண்மையான கணினியில் உள்ளவாறு BIOS, CPU, RAM, HDD போன்ற விடயங்களை உள்ளிணைத்திருப்பார்கள். ஆக ஒரு புதிய கணினியானது எவ்வாறிருக்குமோ, அவ்வாறே இந்த மென்பொருள் ஒரு போலியான தோற்றப்பாட்டினை தரும். இதன் மூலம் நாம் உண்மையாகவே ஒரு கணினியில் செய்து பரீட்சித்துப்பார்க்க வேண்டிய அனைத்துவிடயங்களையும் செய்யலாம். நமது நிஜ கணினிக்கு எவ்வித பிரச்சனையும் வராது. முக்கியமாக மென்பொருட்களின் பரீட்சார்த்த வேலைகளிற்கு இதனை பாவிக்கலாம். ஆனால் இப்போது பெரிய நிறுவனங்களே தமது நிர்வாக மென்பொருட்களை பல கிளைகளில் நிறுவிட இந்த மென்பொளைத்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம் நிறுவனங்களில் IT க்கென ஒவ்வாரு கிளைளிலும் பலரை பணியிலமர்த்தி அதிக சம்பளம் தருவதைவிட தனியாக ஒரு பொதுவான மேலாளரை வைத்துக்கொண்டு சாதாரண IT ஆரம்பநிலை பணியாளர்களைக்கொண்டே கிளைகளில் வேலைவாங்கிவிடலாம். நாமும் ஆரம்பத்தில் இந்த மென்பொருளைக்கொண்டே நிறுவி அனுபவப்பட்ட பின்னர் நிஜ கணினியில் Dual Boot ஆக நிறுவிப்பார்க்கலாம்.
1. சன் நிறுவனத்தாரின் இலவச மென்பொருளான Virtual Box எனும் மெனடபொருளை தரவிறக்கம் செய்து நிறுவிடுங்கள். உங்களிடம் VM Ware Workstation இருப்பின் அதுவும் சிறந்தது. ஆனால் இலவசமில்லை.
2. அம் மென்பொருளை திறந்ததும் கீழே உள்ளவாறு இருக்கும்.
3. புதியதொரு வேர்சுவல் கணினியை உருவாக்க New எனும் பட்டனை அழுத்தவும். வரும் திரையில் Next என்பதை சொடுக்க நமது வேர்சுவல் கணினியில் நிறுவப்படப்போகும் இயக்கதளத்தைப்பற்றி அம் மென்பொருளிற்கு அறிவிக்கவேண்டும்.
மேலேயுள்ள திரையில் நமது போலி கணினியின் பெயர் Fedora10 எனவும் நிறுவப்போகும் இயக்கதளத்தின் வகை Fedora எனவும் தந்துள்ளேன். அடுத்து Next இனை சொடுக்கவும்.
4. அடுத்து நமது போலி கணினியின் RAM இன் அளவினை தீர்மானிக்கவேண்டும். சாதாரணமாக 512 அல்லது 256 போதும். வேர்சுவல் கணினியில் நாம் வேறு மென்பொருட்களையும் நிறுவி பயன்படுத்தப்போகிறோமெனில் விரைவான செயற்பாட்டிற்கு அதிகளவான RAM தரலாம். இதனை எப்போதுவுண்டுமானாலும் நாம் மாற்றிக்கொள்ளலாம்.
5. அடுத்து வன்தட்டு பற்றிய தகவல்களை தரவேண்டும். நாம் புதிதாக ஒரு போலி வன்தட்டை உருவாக்கப்போகிறோம்.
அடுத்து dynamic Storage என்பதை தெரிவு செய்யவும். இது ஏனெனில் நீங்கள் 10GB என போலி வன்தட்டுக்கான இடத்தை தந்திருந்தால் அந்தளவு இடம் உண்மையில் உங்கள் உண்மையான வன்தட்டிலிருந்து பெறப்படப்போவதில்லை. நீங்கள் பாவிக்கும் அளவிற்கமைய கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டு போகும். அடுத்து Next.
இவ்வன்தட்டை C Drive ல் வைக்காமல் வேறு partition ல் இடுவது நல்லது. அதற்கு Location எனுமிடத்தில் உள்ள போல்டர் ஐகானை சொடுக்கி எங்கு உங்கள் போலி வன்தட்டுக்கான கோப்பு இருக்கவேண்டுமென தெரிவு செய்யுங்கள். பின்னர் எவ்வளவு இடம் தேவையெனவும் தெரிவு செய்யுங்கள். இங்கு நான் 15GB தெரிவு செய்துள்ளேன். ஆனால் உண்மையில் அந்தளவு free space நமது வன்தட்டில் இருக்கவேண்டியதில்லை. உண்மையில் கிட்டத்தட்ட 5 GB அளவுமட்டுமிருந்தால் போதுமானது. அதற்குத்தான் முன்னர் Dynamic Storage என்பதை தெரிவு செய்திருந்தோம்.
6. சரி. இப்போது நாம் நமது போலி கணினியை உருவாக்கிவிட்டோம். நமது போலி கணினியின் உருவாக்கம்பற்றிய சாராம்சம் இப்படியாக திரையில் காண்பிக்கப்படும்.
Finish என்பதை சொடுக்கி நாம் Virtual Box ன் முகப்புத்திரைக்கு செல்லலாம்.
7. இனி அம்முகப்புத்திரையில் நமது Fedora வினை நிறுவுவதற்கான நடைமுறைகளை செய்யப்போகிறோம். முதலில் எங்கிருந்து நிறுவுவது ? CD / DVD Drive இலிருந்துதானே ? அதனைத்தான் இப்போது தகவமைக்கப்போகிறோம்.
முகப்புத்திரையில் CD/DVD Rom என்பதனை சொடுக்கவும். வரும் சாளரத்தில் Mount CD/DVD Rom என்பதனை டிக் பண்ணி அச்செயல்பாட்டை enable செய்யவும்.
இப்போது இரண்டு தெரிவுகளுண்டு. ஒன்று நமது கணினியிலிருக்கும் CD/DVD Drive இனையே நமது போலி கணினிக்கும் CD/DVD Rom ஆக வைப்பது. அல்லது ஒரு ISO Image கோப்பினை போலி CD/DVD Rom ஆக நமது போலி கணினிக்கு தகவமைப்பது.
உங்களிடம் CD இருந்தாலோ அல்லது தரவிறக்கிய CD இனை நீங்கள் இறுவட்டில் பதிந்துவிட்டீர்களெனில் முதலாம் தெரிவை தரலாம். அல்லது இரண்டாம் தெரிவை தரலாம். நாம் இங்கு இரண்டாம் தெரிவையே தொடரப்போகிறோம்.
ISO Image File என்பதன் அருகில் உள்ள கோல்டர் ஐகானை சொடுக்க வரும் சாளரத்தில் Add எனும் பட்டனை சொடுக்கி தரவிறக்கிய ISO கோப்பினை தெரிவு செய்யுங்கள்.
பின்னர் Next / Finish என தந்து மறுபடியும் முகப்புத்திரைக்கே வாருங்கள்.
7. இப்போது Start பட்டனை சொடுக்கி நமது போலி கணினியில் பெடோராவை இயக்க துவங்கவேண்டியதுதான்.
அடுத்த பதிவை பார்க்கவும்.
Fedora OS அறிமுகம் - 0
Fedora லினக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு இலவச கட்டற்ற இயங்குதளம். இந்த பெடோரா லினக்ஸ் பற்றிய உதவிக்குறிப்புகளாகத்தான் இந்த ”தமிழ் Fedora" அமையவிருக்கிறது. முதலிலேயே லினக்ஸ் பற்றி அதிகமாக எனக்கு ஒன்றும் தெரியாதென இங்கேயே கூறிவிடுகிறேன். வழமையாக உபுண்டு வைத்தான் பயன்படுத்தி வந்தேன். ஆனால் பெடோராவை கற்றிருப்பது கூடுதல் தகைமையாதலால் இப்போது அதனையும் சுயமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். பல இணையத்தளங்களும் Fedora வினது உத்தியோக பூர்வ இணையத்தளமும் பல உதவிக்குறிப்புகளை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதற்கண் நன்றிகள். படிக்கும் தகவல்களை அப்படியே கணினியில் சேமிக்கும் வழக்கமுண்டு. அதனை பதிவிலும் இட்டு உங்களுடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களின் அனுபவத்திலுருந்தும் அறிவிலுமிருந்தும் இன்னும் புதிய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாமென நினைக்கிறேன். ஏனெனில் இங்கு பலர் சுளியோடி முத்துப்பெற்றவர்கள். அவர்களின் ஆதரவு எப்போதுமிருக்குமென நம்புகின்றேன்.
பல நிறுவனங்கள் தங்களின் சர்வர் மேலாண்மைக்கு அதிகம் Cent OS, Suse Linux மற்றும் RedHat Server போன்றவற்றைத்தான் பயன்படுத்துவார்கள். சிலர் Debian OS பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் ஒவ்வொரு வினக்ஸ் இயங்குதளங்கள்தான். Linux Flavors என குறிப்பிடுவார்கள். இவற்றில் Cent OS மற்றும் RedHat Server ஆகியவை Fedora வினை தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். உபுண்டுவிற்கு 98%ம் தான்.
Susi Linux மற்றும் Debian OS போன்றவை உபுண்டுவிற்கு தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். Fedora விற்கு 98%ம் தான். காரணம் Fedora ஆனது ஆரம்பகால RedHat இயங்குதள kernel இனை அடிப்படையாக வைத்து அதே கட்டமைப்புக்களுடன் உருவாக்கப்பட்டது. ஆனால் உபுண்டுவோ Debian OS இன் கட்டமைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையில் மேலோட்டமாகப் பார்த்தால் எந்த வேறுபாடுகளும் தெரியாது. ஆனால் மென்பொருள் நிறுவும் பொறிமுறையும் சில commands வித்தியாசமாக பாவிக்கப்படும். ( வேறுபாடுகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தரவும் )
சரி, இனி பெடோராவைப்பற்றி பார்க்கலாம். Fedora Core 4 விலிருந்து இதனை பயன்படுத்தி வருவதனால் மற்றய லினக்ஸிலிருந்து இது மிகவும் பிடித்தவொன்றாக மாறிவிட்டது. பெடோராவின் முழு வரலாறும் விக்கிப்பீடியாவின் பக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அதையெல்லாம் விட்டுவிட்டு விடயத்திற்கு வரலாம். தற்போது பெடோராவின் 10ம் பதிப்புதான் சந்தையில் இறுதியாக வெளிவந்திருக்கும் பதிப்பு. அடுத்த மாதம் 11ம் பதிப்வை வெளியிடுகிறார்கள். இப்போது வேண்டுமானால் பீட்டாவினை தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் இங்கு நாம் பார்க்கப்போவது Stable ஆகவிருக்கும் 10ம் பதிப்பைப்பற்றித்தான்.
பெடோரா 10 ஆனது x86 மற்றும் x64 பதிப்புகளாக கிடைக்கிறது. நமது கணினியின் வேகம் அதிகமாகவிருந்தால் x64 பதிப்பினை நிறுவிக்கொள்ளலாம். அதாவது உங்களிடம் 3GB க்கு மேலான அளவு ரேம், AMD x86_64 ரக அல்லது இன்டல் Dual Core/ Core 2 Due மற்றும் இவற்றிற்குப்பிந்திய processor இருக்குமானால் இந்த 64பிட் பதிப்பின் முழு வேகத்தையும் எங்களால் அனுபவிக்க முடியும். வேகம் என்றால் சும்மா இல்லை. மேலே கூறியதைவிட வேகம் குறைந்த எனது மேசைக்கணினியில் 64பிட் பதிப்பு நிறுவ எடுத்த கால அளவு வெறும் 5 நிமிடங்கள்தான். ( 32பிட் உபுண்டுவிற்கு 15 நிமிடம், 32பிட் விஸ்டாவிற்கு அல்டிமேட் 20-30 நிமிடம், 32 பிட் XP_sp2 க்கு 20-25 நிமிடம், 64பிட் XP_sp2 ற்கு 15 நிமிடங்களும் பிடித்தது). அவ்வாறில்லையெனில் 32பிட் பதிப்பான x86 இனையே நிறுவிக்கொள்ளலாம். நீங்கள் போலி இயங்குதள மென்பொருட்களை ( Vertual Box / VM Ware போன்றவற்றில் நிறுவலாம். ஆனால் Vertual PC இனை தவிர்த்தல் நலம்) பாவிப்பதாயின் 32பிட் இயங்குதளத்தையே நிறுவிக்கொள்ளவும்.
அடுத்து நமக்குத்தேவை எம்மாதிரியான வரைகலை இடைமுகப்பினை (Desktop Interface ) என்பதை வைத்து 2 வகையாக பிரிக்கலாம். சாதாரணமாக பிரபலமான Linux Desktop ஆக Gnome விளங்குகிறது. இது பாவிக்க சற்று இலகுவாகவிருப்பினும் பயனர்களிற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்வது கடினம். அதற்கேற்றாற்போல பயனர்தான் வளையவேண்டும். அடுத்தது KDE எனப்படும் பழைமைவாய்ந்த இடைமுகப்பு. இது ஆரம்ப காலத்தில் லினக்ஸ் முதன்முதலில் GUI ஆக வந்தபோதிலிருந்து பணன்படுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. தற்போது KDE 4.1 ஆனது மிகவும் வலிமைவாய்ந்த இலகுவானதொரு பயனர் இடைமுகப்பாக தெழிற்படுகின்றது. பயனர் தேவைக்கேற்ப வளைந்து கொடுப்பது இதன் சிறப்பம்சமாகும். இதனால் லிகன்ஸிற்கு மென்பொருள் தயாரிப்பவர்களின் முதற்தேர்வாகவும் KDE இருக்கின்றது.
நாம் இங்கு முதலில் 32பிட் Gnome உடைய பெடோராவைப்பற்றி பார்க்கலாம். 64பிட்டிற்கு வரவேற்பு எவ்வாறு கிடைக்குமென தெரியாது. அதனால் 64பிட் பற்றி பின்னர் பார்க்கலாம். ( தட்டச்சு செய்யும் நேரம் மிச்சம் ) மற்றும் சாதாரணமான Genome இலிருந்து படிப்பதும் நல்லது. நல்ல புலமை பெற்றபின்னர் மற்றயதை நாமே சுயமாக கற்றுக்கொள்ளலாம்.
சரி, Fedora 10 x86 நிறுவப்போகின்றோம். இவற்றை எங்கிருந்து எவ்வாறு பெற்றுக்கொள்வதென பார்க்கலாம்.
Fedora x86 Gnome 1CD ISO Direct Download Live CD
Fedora x86 Gnome 1CD ISO Torrent Download Live CD
Fedora x86 KDE 1CD ISO Direct Download Live CD
Fedora x86 KDE 1CD ISO Torrent Download Live CD
Fedora x64 Gnome 1CD ISO Direct Download Live CD
Fedora x64 Gnome 1CD ISO Torrent Download Live CD
Fedora x64 KDE 1CD ISO Direct Download Live CD
Fedora x64 KDE 1CD ISO Torrent Download Live CD
Full Download List
சரி. இனி நிறுவ முன்னர் கணினியின் அடிப்படைத்தேவைகள் என்னவென பார்க்கலாமா ? அதாவது System Requirements. இதை யாராவது இணையத்தில் தேடி பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்ச்சி. இல்லாவிடில் அதையும் இடுத்த பதிப்பில் கூறிவிடுகிறேன். சும்மா அடிச்சு தேடிப் பாருங்க.
அடுத்த பதிவு நிறுவுவது எவ்வாறென படங்களுடன் வருகிறேன்.
அன்புடன் சுபாஷ்.
மேலதிக தகவல்களுக்கு:-
Linux Flavors பற்றி கூறியிருந்தேன்.
அனைத்து லிகள்ஸ் பற்றிய ஒப்பீடு
பிரபலமான 10 லினப்ஸ் பற்றிய ஒப்பீடு
-------------------------------------------------------------
டிஸ்கிs-
தமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும் உதவியாகவிருக்கும். நன்றி.
அன்புடன் சுபாஷ்
---------------------------------------------------------------------------
-----------------------------
முந்தய பதிவினில் System Requirements பற்றி கேட்டிருந்தேன்.
அவைதான் அவை.
Fedora 10 நிறுவ போலி இயக்கதளத்தை வடிவமைத்தல் - 02
இந்தப்பதிவின் முந்தய பாகம் . தொடர்கிறது....
8. இனி நீங்கள் பெடோராவின் ஜோதியில் ஐக்கியமாகிவிடலாம். பூட் செய்ததும் பெடோராவின் Live எனப்படும் செயல்பாடு ஆரம்பிக்கப்படும். இதன் சிறப்பம்சமென்னவெனில் இயக்குதளத்தினை நிறுவாமலேயே அவ்வியக்குதளத்தினை நாம் பயன்படுத்தலாம். முக்கியமான வேளைகளில் கணினி செயற்படாது போனால் இந்த Live CD இனை பயன்படுத்தி நமது வன்தட்டிலிருக்கும் தகவல்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த Live ஆரம்பித்ததும் உங்கள் திரை கீழேயுள்ளவாறு காணப்படும்.
8. இனி நீங்கள் பெடோராவின் ஜோதியில் ஐக்கியமாகிவிடலாம். பூட் செய்ததும் பெடோராவின் Live எனப்படும் செயல்பாடு ஆரம்பிக்கப்படும். இதன் சிறப்பம்சமென்னவெனில் இயக்குதளத்தினை நிறுவாமலேயே அவ்வியக்குதளத்தினை நாம் பயன்படுத்தலாம். முக்கியமான வேளைகளில் கணினி செயற்படாது போனால் இந்த Live CD இனை பயன்படுத்தி நமது வன்தட்டிலிருக்கும் தகவல்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த Live ஆரம்பித்ததும் உங்கள் திரை கீழேயுள்ளவாறு காணப்படும்.
இந்தத்திரை வந்ததும் உங்களிற்கு விருப்பமானவாறு எங்கு வேண்டுமானாலும் சென்று நமது பெடோராவினை சுற்றிப்பார்த்து எப்படியிருக்கிறதென பார்த்துவரலாம்.
பதிவு நீண்டுவிட்டதால் அடுத்த பதிவினில் நமது போலி கணினியின் வன்தட்டில் நிரந்தரமாக நிறுவுவது எவ்வாறென பார்க்கலாம். போலி கணினியில் செய்வதனைத்தையும் உங்கள் உண்மையான கணினியிலும் செய்யலாம். ஆனால் ஏற்கனவே உங்களிடம் வேறு இயக்குதளமிருப்பின் அதனை பாதிக்காமல் நிறுவுவதெப்படியென தெரிந்துவிட்டு நிறுவலாம். அதனை விளக்கி அடுத்த பதிவில் சொல்கிறேன்.
அன்புடன் சுபாஷ்
---------------------------------------------------------------------------
எல்லாம் பார்த்து முடிந்ததா? அடுத்த பதிவிற்கு முன்னரே நீங்கள் வன்தட்டில் நிரந்தரமாக நிறுவிப்பார்க்கலாமே. ஏனெனில் உங்கள் கணினிக்கு எதுவும் ஆகப்போவதில்லை. நிறுவலில் பிழையிருப்பின் இந்த போலி கணினியை அழித்துவிட்டு புதிதாகவொன்று உருவாக்கினால் போகிறது. இதற்கு Desktop ல் உள்ள Install to Hard Drive எனும் ஐகானின் மீது இரட்டைச்சொடுக்கு போடவும். நீங்களாகவே வெப்பில் தேடி எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி நிறுவுவதென ஒரு முறை trip போவது போல முயன்று பார்த்துவிடுங்கள். பின்னர் பதிவிட்டபின்னர் பதிவோடு ஒத்துப்பார்த்து சரிபார்த்துவிடலாம். வாழ்த்துக்கள்.
practical ஆக முயன்று பார்க்காமல் படிக்கும்போது, நிறைய விடயங்களை புரியாமலே படித்துக்கொண்டுசெல்கிறோம். ஆனால் ஒருமுறை முயன்று பார்த்துவிட்டால் பல விடயங்களை பற்றிய அறிவு கிடைத்துவிடுவதனால் நாம் பல கேள்விகளோடு படிக்கத்துவங்குகிறோம். இதனால் முழுவதுமாக படிக்கும் விடயத்தைப்பற்றி புரிந்த கொள்ளலாம். அதுவும் ஒரேதரத்திலேயே!!!!
பதிவிற்கும் சரி, பாடசாலை. பல்கலைக்கழகங்களிலும்சரி இம்முறை நிறையவே கைகொடுக்கும்.
-----------------------------
முந்தய பதிவினில் System Requirements பற்றி கேட்டிருந்தேன்.
fedora 10 system requirements என கூகிளில் தேடினால் முதலாவதாக வரும் தேடல் முடிவிலேயே முழு பதிலும் இருக்கிறது.
அவைதான் அவை.
2.4.2.1. Hardware requirements for x86
In order to use specific features of Fedora 10 during or after installation, you may need to know details of other hardware components such as video and network cards.
2.4.2.1.1. Processor and memory
The following CPU specifications are stated in terms of Intel processors. Other processors, such as those from AMD, Cyrix, and VIA that are compatible with and equivalent to the following Intel processors, may also be used with Fedora.
Fedora 10 requires an Intel Pentium or better processor, and is optimized for Pentium 4 and later processors. - Recommended for text-mode: 200 MHz Pentium-class or better
- Recommended for graphical: 400 MHz Pentium II or better
- Minimum RAM for text-mode: 128MiB
- Minimum RAM for graphical: 192MiB
- Recommended RAM for graphical: 256MiB
2.4.3.1. Hardware requirements for x86_64
In order to use specific features of Fedora 10 during or after installation, you may need to know details of other hardware components such as video and network cards.
2.4.3.1.1. Memory requirements for x86_64
- Minimum RAM for text-mode: 256MiB
- Minimum RAM for graphical: 384MiB
- Recommended RAM for graphical: 512MiB
0 comments:
Post a Comment